பஞ்சாப்: சுவர் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் லக்கன்பூர் கிராமத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு தொழிலாளர்கள் பலர் இன்று காலை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென புதிதாக கட்டப்பட்ட சுவர் சரிந்து விழுந்தது. தொழிலாளர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் அலறினர்.

4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர்.