போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை…பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்

சண்டிகர்:

பஞ்சாப் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர் அமரிந்தர் சிங் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ பஞ்சாப் மாநிலம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

போதைப் பொருள் கடத்தல், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.