டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள்

டெல்லி: டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட வில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி அளிக்க முடிவெடுத்த விவசாயிகள், குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26ம் தேதியில் டெல்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணி நடத்த போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், காஜிப்பூா், சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளிலிருந்து பேரணியை தொடங்கி மீண்டும் அதே இடத்தில் நிறைவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே, குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.