மகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு

ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் இனி அரசு பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் இல்லை என அம்மாநில  முதல்வர் அறிவித்துள்ளார்.

நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.   பல உலகத் தலைவர்கள் அதையொட்டி மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.   பல சமூக வலைத் தளங்களில் சாதனைப் பெண்கள் குறித்த பதிவு வெளியாகியது.

அவ்வகையில் இந்தியாவிலும் அனைத்து தலைவர்களும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  தெலுங்கானாவில் நேற்று மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது டிவிட்டரில், “சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.   பஞ்சாப் அரசு பெண்களின் பாதுகாப்புக்காக 8 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.  மேலும் இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது” என அறிவித்துள்ளார்.