ண்டிகர்

சாமியார் ராம்ரஹிம் கைதையொட்டி நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டு தொகையையும் மாநில அரசு அளிக்காது என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

பலாத்கார வழக்கில் சாமியார் ராம்ரஹிம் கைதையொட்டி அரியானாவில் மட்டும் அல்ல, பஞ்சாபின் தென்மேற்கில் உள்ள மால்வா பகுதியிலும் கடும் கலவரம் நிகழ்கிறது.   கலவரங்களை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்வையிட பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் வந்துள்ளார்.  போலீசார் மற்றும் அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”இந்தக் கலவரத்தில் இறந்த 38 பேரில் 11 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.   இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்  மாநில அரசு இழப்பீடு வழங்காது.  உடனடியாக இது குறித்து விசாரித்து இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.  இவ்வளவு கலவரம் நிகழ்ந்ததற்கு முக்கிய காரணம் தீர்ப்பு தினத்தன்று பஞ்ச்குலாவில் கூட்டத்தை கூட விட்ட அரியானா அரசுதான்.   நீதிமன்றம் அதிகம் கூட்டம் கூடக் கூடாது என உத்தரவிட்டிருந்தும் அதை பின்பற்ற அரியானா அரசு தவறி விட்டது” என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அரியானாவின் ரோஹ்தாக் சிறையில் உள்ள சாமியாருக்கு தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிக்க உள்ளார்.