ஜிராக்பூர், பஞ்சாப்

பாஜக இல்லாத இந்தியாவை அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஆறு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ளன.  இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப் பதிவு வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.   இந்த ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது.   மேற்கு வங்கத்தில் வன்முறை காரணமாக நேற்றே பிரசாரம் முடிக்கப் பட்டது

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங் தனது மனைவி பிரினீத் கவுருக்குகாக பாட்டியாலா தொகுதியில் உள்ள ஜிராக்பூரில் நேற்று ஒரு பேரணியில் கலந்துக் கொண்டார்.  அவர் அந்த  பேரணியில், “பிரதமர் மோடி இந்தியாவுக்கு வலுமை தரும் மத சார்பின்மையை பாழ்படுத்தி வருகிறார்.  அதனால் இந்திய மதச்சார்பின்மைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாடு தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளது.இதை மாற்றி நாட்டின் மற்ரும் மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்த இந்த பிரிவினை வாதம் சிறிதும் உதவாது.  அகாலி தளம் தங்கள் எதிர்காலத்துக்காக பஞ்சாப் மக்களிடையே பிரிவினையை தூண்டி விடுகிறது.   இதனால் கடந்த 10 ஆண்டுகால அகாலி தள ஆட்சியில் மாநிலம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதைப் போலவே மத்தியில் பாஜக ஆட்சியும் நாடு முழுமைக்கும் பின்னடைவை அளித்துள்ளது.

அரசியல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் சகஜமானது.  காங்கிரஸ் அரசு இது வரை தாழ்வில் இருந்தது.  இப்போது ஏற்றம் பெற்று வருகிறது.   அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது.   நாம் இனி பாஜக இல்லாத இந்தியாவை அமைப்போம்.   பாஜகவை ஆட்சியை விட்டு அகற்றுவதன் மூலம் நலிந்து கிடக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்” என உரையாற்றினார்.