ண்டிகர்

முன்னாள் படை வீரரான பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மாநில காவல்துறையில் பணிபுரியும் கார்கில் வீரருக்கு இரட்டை பதவி உயர்வு அளித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த 1965 ஆம் வருடம் நடந்த இந்திய பாகிஸ்தான் போர் நடந்த போது இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர் ஆவார். அவருடைய தந்தையார் 1935 ஆம் வருடம் சிக்கிய ராணுவப்படையில் பணி  புரிந்துள்ளார். அtது மட்டுமின்றி அவருடைய தாத்தாவன மேஜர் ஜெனரல் மகாராஜா பூபிந்தர் சிங் ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். இவ்வாறு அவர் பரம்பரை ராணுவத்தினர் ஆவார்.

கார்கில் போரில் கலந்துக் கொண்ட சத்பால் சிங் ராணுவத்தில் இருந்து 2010 ஆம் வருடம் விலகிய பிறகு பஞ்சாப் காவல்துறையில் சேர்ந்து பணி புரியத் தொடக்கி உள்ளார். அவர் தற்போது போக்குவரத்து காவலராக உள்ளார். அவர் பலமுறை பதவி உயர்வு கோரி விண்ணப்பித்த போதும் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருந்துள்ளது. பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்ற அமரீந்தர் சிங் இது குறித்த கோப்புகளைப் படித்துள்ளார்

ஒரு ராணுவ வீரர் என்னும் முறையில் அவருடைய பதவி உயர்வு குறித்து அவர் விண்ணப்பித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டு வருத்தம் அடைந்த அமரீந்தர் சிங் தற்போது கார்கில் போர் நினைவு தினத்தை  ஒட்டி சத்பால் சிங் குக்கு இரட்டை பதவி உயர்வு அளித்துள்ளார். சிறப்பு உத்தரவின் பேரில் முதல்வர் அளித்துள்ள இந்த இரட்டை பதவி உயர்வால் தற்போது சத்பால் சிங் துணை உதவி ஆய்வாளர் ஆகி உள்ளார்.