சண்டிகர் :

ஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, ஆன்லைன் மூலம் ரூ. 23 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளள தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரீந்தர்சிங். இவரது மனைவி பிரனீத் கவுர். இவர் பாட்டியாலா தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.  இவரிடம் போன் மூலம் பேசிய நபர், தான் ஒரு வங்கி அதிகாரி என்றும், கவுரின் சம்பளம்  குறித்து பேசியவர், தொடர்ந்து அவரது வங்கிக் கணக்குகளையும் ஏமாற்றி வாங்கி உள்ளார்.

தன்னிடம் பேசியவர் வங்கி அதிகாரி என்று நம்பிய கவுரும், தனது வங்கி கணக்கு, ஏடிஎம் பின்  உள்பட சுய விவரங்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்புவித்துள்ளார். இதையடுத்து, கவுர், நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்று விட்டார்.

இந்த நிலையில், கவுரிவின் மொபைல் எண்ணுக்கு, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுர் இது குறித்து தனது வீட்டு நபர்களிடம் விசாரித்த நிலையில், யாரும் பணம் எடுக்காத நிலையில், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.

இதுகுறித்து காவல்துறையில் கவுர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து வரும் பாட்டியாலா மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்எஸ்பி) மந்தீப் சிங் சித்து, கடந்த  ஜூலை 29 ம் தேதி கவுர்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அன்சாரி என்பவரை ராஞ்சி போலீசார் கைது செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

குற்றவாளி ஜார்க்கண்டில் உள்ள தொலைதூர கிராமமான ஜம்தாரா கிராமத்தில் இருந்து இயங்கி வந்தாகவும், கைது செய்யப்பட்டுள்ள அன்சாரி  இணைய குற்றவாளிகளின் கும்பலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர்  என்று தெரிவித்த எஸ்எஸ்பி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.