பஞ்சாப் எம் பியின் மைத்துனர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை

மிர்த சரஸ்
டன் கொடுத்த பணம் திரும்பி வராததால் பஞ்சாப் பாராளுமன்ற உறுப்பினரின் மைத்துனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.


அமிர்தசரஸ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் குர்ஜித் ஔஜ்லா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருடைய மைத்துனர் (சகோதரியின் கணவர்) ஹர்பிரீத் சிங் சோனு என்பவர் புவா நங்கிலி என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இன்று காலை இவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் என ஒரு பட்டியலை தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பஞ்சாப் காவல்துறை சூப்பிரண்ட் பரம்பால் சிங் விசாரணை செய்து வருகிறார்.
பரம்பால் சிங், “ஹர்பிரீத் சிங் சோனு தனது தற்கொலைக் கடிதத்தில் தலாம் கிராமத்தில் உள்ள மன் தீபக் சிங் தனக்கு ரூ.90 லட்சம் தராமல் ஏமாற்றியதாகவும் வருண் சுக்லா என்பவர் தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த கடிதத்தில் 12 விவசாயிகள் தன்னிடம் வாங்கிய கடனை தரவில்லை எனவும் அவர்களின் பெயர் மற்றும் தர வேண்டிய பாக்கி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்:” என தெரிவித்துள்ளார்.
ஹரிபிரீத் எழுதிய தற்கொலைக் கடிதத்தை அடிப்படையாக கொண்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.