சாதனை வெற்றிபெற்ற பஞ்சாப் அணி – 126 ரன்களை எட்டமுடியாமல் தோற்ற ஐதராபாத் அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. வெறும் 126 ரன்களை வெற்றிகரமாக பாதுகாத்து, தனது வெற்றியை சாதித்தது பஞ்சாப் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 126 ரன்களை மட்டுமே அடித்தது. முந்த‍ையப் போட்டியில் 223 ரன்களைக்கூட பாதுகாக்க முடியாமல் தோற்றது பஞ்சாப் அணி. ஆனால் இன்றோ, வெறும் 126 ரன்களை மட்டுமே வைத்துக்கொண்டு வென்று சாதித்துள்ளது பஞ்சாப் அணி. அந்தளவிற்கு எழுச்சி கண்டுள்ளது அந்த அணி.

ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 20 ரன்களில் 35 ரன்கள் எடுத்தார். அது மட்டுமே அந்த அணியின் உருப்படியான ஆட்டம். மற்ற யாருமே,‍ அணியின் வெற்றிக்குத் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை.

பேர்ஸ்டோ 19 ரன்களையும், மணிஷ் பாண்டே 29 பந்துகளில் 15 ரன்களையும், விஜய் சங்கர் 26 ரன்களையும் அடித்தனர். முடிவில், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே அடித்து 12 ரன்களில் தோல்வியடைந்தது.

அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவி பிஷ்னாய் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். கிறிஸ் ஜோர்டான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.