அரியானா: பஞ்சாப் மாநிலத்தில், உருளைக்கிழங்கின் விலை 3 மடங்காக விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகம். வடமாநில மக்களின் பிடித்தமான உணவில் உருளைக்கிழங்குக்கு முதன்மையான இடம் இருக்கிறது.

இந்த ஆண்டு உருளை விளைச்சலுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் அகமகிழ்ந்துள்ளனர். 50 கிலோ மூட்டை கொண்ட உருளைக்கிழங்கு 600 முதல் 750 ரூபாய்க்கு விலை போனது.

இது கடந்த 4 ஆண்டுகளில் 200 ரூபாய் வரை தான் விற்பனையானது. 600 ரூபாய்க்கும் விலை போனாலும் அது போதுமானதாக இல்லை என்று சில விவசாயிகள் கூறி இருக்கின்றனர்.

ஒரு கிலாவுக்கு சராசரியாக 9 ரூபாய் வரை உற்பத்தி செலவாகிறது, இன்னும் கூடுதல் விலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளனர். இது குறித்து குர்மைல் சிங் என்பவர் கூறி இருப்பதாவது:

4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, குவிண்டால் 1500 ரூபாய் வரை உருளைக் கிழங்கை விற்றிருக்கிறேன்.  கடந்த ஆண்டுகளில் அதிகபட்சம் 400 ரூபாய் வரை விலையே கிடைத்தது.

நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். இதே விலை நீடித்தால் எனது கடனை அடைத்துவிடுவேன் என்றார். மற்றொரு விவசாயியான ஹரிம்தார் சிங் கூறுகையில், இந்தாண்டு நல்ல விலை கிடைத்திருக்கிறது.

ஆனாலும், சீரற்ற நிலையே நிலவுகிறது. விலை உயர்வில் ஏற்றம், இறக்கம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.