சர்ச்சைக்குரிய டிவி தொடர்களுக்கு தடை…!

பஞ்சாப்பில் ஒளிப்பரப்பாகம் டிவி தொடரான “ராம் சியா கி லக் குஷ்” என்ற தொடரில் ‘ வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் , தவறான கருத்துக்களை கூறுவதாகவும்’ தவறான கருத்துக்களை கூறுவதாகவும்,வால்மீகி அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் ஜலந்தரில் நடந்த கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார். முதல்வரின் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் அந்தந்த மாவட்டங்களில் கேபிள் ஆபரேட்டர்கள் சீரியலை ஒளிபரப்ப தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிடத் தொடங்கினர் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.