அமிர்தசரஸ்: அரசு ஊழியர்களுக்கு திடீரென இரு மடங்கு சம்பளம்

ஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளமாக இரு மடங்கு ஊதியம் அளிக்கப்பட்டது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீபாவளிப் பரிசு என்று எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால், அடுத்து வந்த அறவிப்பு அவர்களுக்கு துன்ப அதிர்ச்சியை அளித்தது.

அதாவது இயந்திரக் கோளாறால் தவறுதலாக இரு மடங்குப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அதை யாரும் எடுக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்தத் தகவலை அமிர்தசரஸ்  மாவட்ட கருவூல அதிகாரி ஏ.கே.மைனி உறுதி செய்தார். ”அமிர்தசரஸில் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பெரும்பாலான அனைத்து அலுவலகங்களிலும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. . விரைவில் ஒரு மாத ஊதியம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அமிர்தசரஸில் மட்டும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை அதிகமாக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று மைனி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.