பஞ்சாப்: சானிட்டரி நாப்கின் வைத்திருந்தவர்களை அறிய மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை – உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்

--

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொல்வதற்காக மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியில் பரவியதை அடுத்து, விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

scholol

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 3 நாட்களுக்கு முன்பு கழிவறையில் சானிட்டரி நான்கின் ஒன்று இருந்தது. அதனை கண்ட பள்ளி ஆசிரியைகள் நாப்கின்கள் வைத்திருந்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக சில மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனையிட்டுள்ளனர்.

மாணவிகளின் ஆடைகளை கலைந்து சோதனையிட்ட வீடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவமானம் தாங்க முடியாத மாணாவிகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளனர். இந்த செய்தி அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக விராணை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிடவே, முதற்கட்டமாக 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாணவிகளை அவமானப்படுத்தியது தொடர்பாக கல்விச்செயலர் கிருஷ்ணகுமார் வரும் திங்கட்கிழமைக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.