ண்டிகர்

ஞ்சாப் மாநில அரசு விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அதன் பிறகு மத்திய அரசு அறிவித்த தேசிய ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

தற்போது மத்திய அரசு ஊரடங்கு விதிகளில் பல தளர்வுகள் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பஞ்சாப் மாநில அரசு மீண்டும் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.

இதை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா அறிவித்துள்ளார்.

இது குறித்த  பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறைக்கு கல்வித்துறை  அனுப்பி உள்ளது.

அந்த வழிமுறைகளுக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.