வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது. இந்த 3 சட்டங்களுக்கு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியது. இந் நிலையில், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மசோதாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் அறிமுகப்படுத்தினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அப்போது முதல்வர் அமரீந்தர் சிங் பேசியதாவது: வேளாண் சட்டங்களில் மத்திய அரசின் நடவடிக்கை விசித்திரம் நிறைந்ததாக உள்ளது என்று கூறினார்.

You may have missed