ண்டிகர்

ஞ்சாப் அரசு கொரோனா அச்சுறுத்தலால் 5800 கைதிகளை விடுதலை செய்ய உள்ளது.

கொரோனா நோயிலிருந்து தப்பிக்க, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தற்காப்பு நடவடிக்கை- தனிமை.

எல்லா நாடுகளுமே கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, 144 தடை உத்தரவை அமல் படுத்தியுள்ளன.

இதனை நடைமுறைப்படுத்த பெரும் தடையாக இருப்பது, ஜெயில்கள்.

ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனி ‘செல்’லை எப்படி உருவாக்க முடியும்?

இதனால் பல நாடுகள், கைதிகளை விடுதலை செய்து வருகின்றன.

பஞ்சாப் அரசாங்கமும் , கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.

அங்கு போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில் கைதாகி 3 ஆயிரம் பேர் சிறையில் உள்ளனர்.

இது தவிர, நகை பறிப்பு உள்ளிட்ட சில்லறை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 800 பேர் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து இவர்களையும், சிறையில் உள்ள மற்றவர்களையும் காக்கும் முயற்சியாக-

மேற்சொன்ன  5 ஆயிரத்து 800 பேரை விடுதலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பஞ்சாப் சிறைத்துறை அமைச்சர் சுக்கிந்தர் சிங்  தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசிடம் இருந்து ஒப்புதல் பெற்றதும் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

‘’ குற்றவாளிகளை ஜெயிலில் இருந்து விடுவிப்பது தவறான முன் உதாரணம் தான் .ஆனால் உயிர்க் கொல்லி நோயைத் தடுக்க வேறு வழி தெரியவில்லையே?’’ என்று சமாதானம் சொல்கிறார், அமைச்சர்.

– ஏழுமலை வெங்கடேசன்