சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்தது. பொதுச் சொத்துக்களும், தனியார் சொத்துக்களும், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இச்சம்பத்தை அறிந்த பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலில் வன்முறையாளர்கள் மீது ஆயுதங்களை பாதுகாப்பு படைகள் பயன்படுத்த தயக்கம் காட்டக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதன் பின்னர் வன்முறையில் ஏற்பட்ட சேதத்திற்கு ஈடாக சாமியாரின் சொத்துக்களை முடக்கி ஈடு செய்துகொள்ளலாம் என ஹரியானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து இந்த வழ க்கில் வரும் 28ம் தேதி தீர்ப்பு விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 29ம் தேதி சாமியாரின் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மாநில அரசை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.