ராகுலுடன் ஒரே மேடையில் இருந்த பஞ்சாப் சுகாதார அமைச்சருக்கு கொரோனா உறுதி

ண்டிகர்

மீபத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து பஞ்சாப் மாநிலத்தில் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

தற்போது நாடெங்கும் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள் அன்று நடந்த நிலத்தைக் காப்போம் பேரணியில் அமைச்சர் பல்பீர் சிங் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் அவருடன் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்

அமைச்சர் பல்பீர் சிங் சித்துக்கு லேசான ஜுரம் மற்றும் தொண்டைக்கட்டு ஏற்பட்டது.

இதையொட்டி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது.

அவருக்கு பாதிப்பு அதிகம் இல்லாததால் அவரை விட்டில் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.