டெல்லி vs பஞ்சாப் – முதலில் களமிறங்கிய கேஎல்.ராகுலின் அணி!

மும்பை: டெல்லி அணிக்கெதிராக நடைபெறும் லீக் போட்டியில், டாஸ் தோற்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

பஞ்சாப் அணி, இதுவரை தான் ஆடிய 2 போட்டிகளில், தலா 1 வெற்றி-தோல்வியுடன் உள்ளது. மேலும், டெல்லி அணியும் அதேநிலையில்தான் உள்ளது.

எனவே, இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் சற்று முக்கியமான போட்டியாக உள்ளது. டெல்லி கேப்டனாக ரிஷப் பன்ட் உள்ளார். பஞ்சாப் கேப்டனாக கேஎல் ராகுல் உள்ளார்.

தற்போது, பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணியில், துவக்க வீரர்களாக ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கியுள்ளனர். ராலூ 10 ரன்களையும், அகர்வால் 14 ரன்களையும் அடித்துள்ளனர். 2.1 ஓவர்களில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை அடித்துள்ளது.

அந்த அணியில், இன்றையப் போட்டியில், ரிலே மெரிடித் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற புதியவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை, முக்கிய வீரராக ஸ்டீவ் ஸ்மித் வாய்ப்பு பெற்றுள்ளார்.