12 ஓவர்கள் – விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் குவித்த பஞ்சாப்!

மும்பை: டெல்லி அணிக்கெதிரான லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணி, 12 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைக் குவித்துள்ளது.

கேப்டன் ராகுலும், துணைக் கேப்டன் மயங்க் அகர்வாலும் ஆடி வருகின்றனர். அகர்வால், 33 பந்துகளில், 4 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களை விளாசியுள்ளார். ராகுல், 40 பந்துகளில் 46 ரகைளை அடித்து ஆடிவருகிறார்.

இதேநிலை தொடர்ந்தால், பஞ்சாப் அணி, இன்றையப் போட்டியில் மிகப்பெரிய எண்ணிக்கையை அந்த அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரில், துவக்க ஜோடியின் ரன் குவிப்பிலும், புதிய சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.

அடுத்தாக கிறிஸ் கெய்ல், ஹுடா மற்றும் பூரான் போன்றவர்கள் காத்திருப்பதால், பஞ்சாப் அணியின் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.