டில்லி,
ஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர்.

காலிஸ்தான்-தலைவர்-மின்டு
காலிஸ்தான்-தலைவர்-மின்டு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் ஹர்மிந்தர் மின்டுவை கடந்த 27ந்தேதி ஒரு கும்பல் சிறையில் புகுந்து மீட்டு சென்றது.
போலீஸ் உடை அணிந்து வந்த அந்த  கும்பல் கண்மூடித்தனமாக எந்திர துப்பாக்கியால் சுட்டவாறே சிறைக்குள் புகுந்து, காலிஸ்தான் தலைவர் மின்டு உள்ட 5 பேரை சிறையில் இருந்து மீட்டு தப்பிச்சென்றனர்.
தப்பியவர்களில் விக்கி கோந்தர் என்ற ரவுடி, குர்பிரீத் செகான், நிட்டா தியோல், விக்ரம்ஜீத், மற்றும் காலிஸ்தான் தீவிரவாதி மின்டு ஆகிய 5 பேர் ஆவார்.
தப்பியோடிய கும்பல் குறித்து,  தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையில், மின்டு டில்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்  பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து இன்று காலை கைது செய்தனர்.