சர்ச்சை நடிகை கங்கனாவுக்கு புதிய சிக்கல் : மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வக்கீல் நோட்டீஸ்..

 

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து இந்தி நடிகை கங்கனா தனது முகநூல் பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார்.

“நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து இந்த பெண்ணை போராட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளனர்” என கங்கனா கூறி இருந்தார்.

உண்மையில் அந்த மூதாட்டி பஞ்சாபில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் மூதாட்டியை கிண்டல் செய்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் ஹகம் சிங் என்பவர் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார்.

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் கங்கனாவுக்கு, இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

– பா. பாரதி