ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து, 223 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.

அந்த அணி தனது இன்னிங்ஸில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவராகிய மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 106 ரன்களைக் குவித்து, இத்தொடரின் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.

இத்தொடரின் முதல் சதமும், அந்த அணியின் கேப்டன் ராகுலால் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், 54 பந்துகளில் 69 ரன்களை அடித்து அவுட்டானார்.

பின்னர், 4வது விக்கெட்டாக, கிளென் மேக்ஸ்வெல்லுடன் நிக்கோலஸ் பூரான் களம் கண்டார். மேக்ஸ்வெல் 9 ரன்களில் 13 ரன்களை அடித்திருக்க, 8 பந்துகளை சந்தித்த பூரான், 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசி, தன்னை களமிறக்கியதற்கான நியாயத்தை நிலைநாட்டினார்.

முடிவில், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி 223 ரன்களை குவித்துவிட்டது.

இந்த 224 ரன்கள் என்ற இலக்க‍ை, முழு மனதிடத்துடன் விளையாடி, ராஜஸ்தான் அணி எட்டுமா?