195 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி!

மும்பை: டெல்லி அணிக்கெதிராக 230 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 195 ரன்களை மட்டுமே சேர்த்தது.

12 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எட்டிய பஞ்சாப், அடுத்த 8 ஓவர்கள் ருத்ரதாண்டவம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிறிஸ்கெய்ல் மற்றும் பூரான் போன்றவர்கள் ஏமாற்றினர்.

இதனால், 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே எட்டியது பஞ்சாப் அணி.

கேப்டன் ராகுலும், துணைக் கேப்டன் மயங்க் அகர்வாலும் அரைசதங்கள் அடித்தனர். அதில், ராகுலின் ஆட்டம் சுமாரான ஆட்டம்தான். தீபக் ஹூடாவும், ஷாருக்கானும் கடைசிநேரத்தில் சற்று அதிரடி காட்டியதால், பஞ்சாப் அணியால் 190 ரன்களைத் தாண்ட முடிந்தது.