என்னாச்சு பஞ்சாப் அணிக்கு? – 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 மட்டுமே எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், நிக்கோலஸ் பூரான் அடித்த 32 ரன்கள்தான் அதிகபட்சம்.

கேப்டன் ராகுல் 27 பந்துகளில் 27 ரன்களை மட்டுமே அடித்தார். மந்தீப் சிங் 17 ரன்களையும், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 20 ரன்களில் 20 ரன்களை மட்டுமே அடித்தனர்.

இதனால், பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

ஐதராபாத் அணி சார்பில், சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரஷித்கான் 4 ஓவர்களை வீசி வெறும் 14 ரன்களை மட்டுமே வழங்கினார்.