சென்னைக்கு வெறும் 107 ரன்கள் மட்டுமே இலக்கு!

மும்பை: சென்னை அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம், சென்னைக்கு எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த அணியின் ஷாருக்கான் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதற்கடுத்து, ரிச்சர்ட்சன் அடித்த 15 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். ஆனால், அதற்கு அவர் எடுத்துக்கொண்டது 22 பந்துகள்.

மற்றபடி, ராகுல், கெய்ல், மயங்க், பூரான் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவருமே இப்போட்டியில் அணியைக் கைவிட்டனர்.

சென்னை அணி சார்பில், தீபக் சாஹருக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன. ஜடேஜாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், நல்ல எகனாமிக்காக வீசினார்.