ஸ்ரீநகர் :

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநில ஆட்கள் சொத்து வாங்க முடியாது என சட்டம் இருந்தது.

இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் ஸ்ரீநகரில் சத்பால் என்ற வணிகர் அண்மையில் வீடு வாங்கினார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்பால், 40 ஆண்டுகளாக, ஸ்ரீநகரில் நகை வியாபாரம் செய்து வந்தார்.

அவரை ஸ்ரீநகரின் பிஸியான பகுதியான சாரைபாலா என்ற இடத்தில் நேற்று தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர்.

காஷ்மீரில் வீடு வாங்கியதால், அவரை கொன்றதாக தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

“காஷ்மீரிகள் அல்லாதோர், இந்த மாநிலத்தில் சொத்து வாங்குவதை ஏற்க முடியாது. அவர்களை ஆக்ரமிப்பாளர்கள் என்றே கருதுகிறோம்” என அந்த தீவிரவாதிகள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

“காஷ்மீரில் சொத்து வாங்கியதால் நிகழ்ந்த முதல் பலி இது. இந்த மாநிலத்தில் சொத்து வாங்கியுள்ள மற்ற வெளி ஆட்களையும் கொல்வோம்” என அந்த தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

– பா. பாரதி