பஞ்சாப் தேர்தல் எக்ஸிட் போல்: ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி அதளபாதாளம்! காங்கிரஸுக்கு வெற்றியாம்!

அமிர்தசரஸ்:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

Congress

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக அகாலிதளம்- பாஜக கூட்டணி அரசுதான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 4-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பை இந்தியா டுடே- மை ஆக்ஸிஸ் இண்டியா இணைந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கு மொத்தமே 4 முதல் 7 இடங்கள்தான் கிடைக்குமாம். இக்கூட்டணி 17% அளவுக்கு வாக்கு சரிவை சந்திக்கும்
காங்கிரஸ் கட்சி 62 முதல் 71 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றுமாம். ஆம் ஆத்மி கட்சி 42 முதல் 51 இடங்களைக் கைப்பற்றி முக்கிய எதிர்க்கட்சியாக அமரும் என்கிறது எக்ஸிட் போல் முடிவு.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: great loss to bjp akalithal aliens, punjap exit poll cogress won, பஞ்சாப் தேர்தல் எக்ஸிட் போல்: ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி அதளபாதாளம்! காங்கிரஸுக்கு வெற்றியாம்!
-=-