125 பழமையான ஓவியங்களை சேகரித்த நிரவ்மோடி……ஏலம் விட பிஎன்பி திட்டம்

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்துவிட்டு வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவரிடம் இருந்து பணத்தை மீட்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிரவ்மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வங்கி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்காக ரூ.3,402 கோடி மதிப்பிலான அவரது சொத்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சோதனையின் போது நிரவ் மோடி 125 பழங்கால ஓவியங்களை சேகரித்து வைத்திருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் பிரபல ஓவியர்களான கெய்த்தோண்டே, ஷூசைன், ஹெப்பர், நாகேஸ்கர் நந்தலால் போஸ், விவான் சுந்தரம் ஆகியோர் வரைந்ததாகும். இதில் ராஜா ரவி வர்மாவின் ஓவியம் ஒன்று மட்டும் ரூ.4 கோடி மதிப்பிலானதாகும்.

இந்த ஓவியங்களை ஏலம் விட்டால் பலர் போட்டிபோட தயாராக வருவார்கள். இதன் மூலம் ஒரு பெருந்தொகையை வசூலித்துவிடலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.