புரட்டாசி மாதப் பிறப்பு: வரும் 16ந்தேதி சபரிமலை நடை திறப்பு

லையாள மாதமான கன்னி மாதமும், புரட்டாசி தமிழ் மாதமும் தொடங்க இருப்பதையொட்டி,  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும்16ம் தேதி திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் போதும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில், கேரளாவில் கன்னி மாதம் தொடங்குகிறது. இதையொட்டி  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக, சபரிமலையை வெள்ளம் சூழ்ந்தது.  சபரிமலை யின் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த திரிவேணி பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.அதைத்தொடர்ந்த கோவில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திரிவேணி பகுதியில் தற்காலிகப் பாலம் கோயில் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வழக்கமான நடைமுறைப்படி சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்காக,  ஐயப்பன் கோயிலின் நடை 16-ம் தேதி  திறக்கப்படுகிறது.

அன்று மாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, கோயிலின் தலைமைத் தந்திரி கண்டராரு ராஜீவரு கன்னிமாச பூஜைகளை நடத்துகிறார். மறுநாள் முதல், தந்திரிகள் பங்கேற்று ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, படிபூஜை, கலபாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்துவார்கள்.

அதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும்.

மழை வெள்ளம் காரணமாக  சாலைகள் அனைத்தும் மோசமான நிலச்சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் வாகனப் பயணத்தின்போது பாதுகாப்பான முறையில் பயணம்செய்து வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் பம்பா நதிப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள்  மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும்,  சபரிமலை யாத்ரீகர்களுக்கு தங்கும் வசதி, குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

வரும் மகர ஜோதிக்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யப்படும் என்றும்   தேவசம் போர்டு தெரிவித்து  உள்ளது

கார்ட்டூன் கேலரி