புரெவி புயல் – கனமழை: இடுப்பளவு தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில்… புகைப்படங்கள்…
சென்னை: பாம்பன் பகுதியில் கரையை கடந்த புரெவி புயல் காரணமாக, தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக தென்மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறைவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புரெவி புயல் காரணமாக கடந்த நாளாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோவில் உட்புறம் தண்ணீரில் மூழ்கியது கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது பக்தர்களியே முகம் சுழிக்க வைத்துள்ளது.
கோவில் நிர்வாகம், முறையாக வடிகால் வசதிகளை தூர் வாராத காரணத்தினால்தான் கோவிலுக்குள் தண்ணீர் தேங்கி உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.