தெலுங்கில் தற்போது மிக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர்களில் விஜய் தேவராகொண்டவுன் ஒருவர்.

அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததன் பின்னர் தெலுங்கு மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களுக்கும் விஜய் தேவரகொண் சிறந்த நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்து தனது முதல் ஹிந்தி படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் விஜய் தேவரகொண்டா. பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்திற்கு ஃபைட்டர் (Fighter) எனபெயரிட்டுள்ளதாக தகவல் வந்தது .

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத், சார்மீ, கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது. விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு liger என்று பெயரிட்டுள்ளதாக இந்த போஸ்டரின் மூலம் தெரியவந்துள்ளது. வித்தியாசமான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.