லோக்ஆயுக்தா: ‘‘மக்களை தவிர என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது’’…மம்தா பானர்ஜி

கொல்கத்தா:

அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்க வழிவகை செய்யும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இச்சட்ட மசோதா இன்று மேற்குவங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதன் மீதான விவாத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ இச்சட்டத்தில் இருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடரும் வரை இச்சட்டத்தின் கீழ் முதல்வர்களும் சேர்க்கப்படமாட்டார்கள். ஜனநாயகத்தில் விவாதங்கள் இருக்கலாம். ஆனால் தவறான செயல்பாடுகள் கூடாது. என்னை பொருத்தவரை என்னிடம் மக்கள் கேள்வி கேட்கலாம். அவர்களை தவிர வேறு யாரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது’’ என்றார்.

லோக்ஆயுக்தாவில் முதல்வர் சேர்க்கப்படக் கூடாது என்ற கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.க்கள் ஆதரித்து பேசினர்.