சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ .

‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுன் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.