செந்தில் – ராஜலஷ்மி ஜோடியை கடுமையாக விமர்சித்த புஷ்பவனம் குப்புசாமி – அனிதா…!

நாட்டுப்புற பாடகர்கள் தம்பதியான செந்தில் – ராஜலஷ்மி ஜோடி முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானவர்கள்

இந்த ஜோடியை நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா ஜோடியினர், மிக கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம். மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்து பேனேன்.” என்று செந்தில் – ராஜலஷ்மி ஜோடியை தாக்கி புஷ்பவனம் குப்புசாமி – அனிதா ஜோடி பேசியுள்ளார்கள்.