கஜாவின் கோரத்தாண்டவம்!: புஷ்பவனம் குப்புசாமியின் உருக்கமான பாடல்

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதமடைந்திருக்கின்றன. ஐம்பது பேருக்கும் மேல் மரணமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பலியாகியுள்ளன.
மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னை உட்பட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. தங்களது எதிர்காலம் குறித்த கேள்வியோடு மக்கள் தவித்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தமிழிசை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி கஜா புயலின் கோரத்தாண்டவம் குறித்து உருக்கத்துடன் பாடலைப்பாடி வெளியிட்டுள்ளார்.
நெஞ்சை உருக்கும் அந்த பாடல்…