திருப்பதி கோவிலில் 14 ஆம் தேதி 7 டன் மலர்களால் நடத்தப்படும் புஷ்பயாகம்

திருப்பதி

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வரும் 14 ஆம் தேதி புஷ்பயாகம் நடத்தப்பட உள்ளது.

கடந்த 15 ஆம் நூற்றாண்டில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது. மெல்ல மெல்ல இந்த பூஜை கைவிடப்பட்டது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகநாதாசார்யுலு இதை மீண்டும் தொடங்கினார். அது முதல் வருடா வருடம் நவம்பர் 14 அன்று புஷ்பயாகம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் வரும் 14 ஆம் தேதி அன்று புஷ்பயாகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக 13 ஆம் தேதி அன்று புஷ்பயாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 14 ஆம் தேதி காலை சுப்ரபாத சேவை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை முடிந்த பின் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் கல்யாண மண்டபம் எடுத்து வ்ரபட்டு யாகசாலையில் யாகங்கள் நடத்தப்பட உள்ளது.

புஷ்பயாகத்தில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, துளசி உள்ளிட்ட 18 வகை மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க 7 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இந்தபுஷ்பயாகத்தை ஒட்டி கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி