‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி படத்தின் அப்டேட்….!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தயாரித்து வரும் ‘புத்தம் புது காலை’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆந்தாலஜியில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் அக்டோபர் 16-ம் தேதி ‘புத்தம் புது காலை’ வெளியாகவுள்ளது.

இளமை இதோ இதோ: இயக்குநர் சுதா கொங்கரா – காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஊர்வசி, கல்யாணி ப்ரியதர்ஷன்.

அவரும் நானும்/ அவளும் நானும்: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் – எம்.எஸ். பாஸ்கர், ரீத்து வர்மா

காஃபி, எனி ஒன்? – இயக்குநர் சுஹாசினி மணிரத்னம் – அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன்

ரீயூனியன்: இயக்குநர் ராஜீவ் மேனன் – ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கில் குருச்சரன்

மிராக்கிள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – பாபி சிம்ஹா, முத்துக்குமார்