புதுச்சேரி:  பாஜக ரவுடி  நடுரோட்டில் வெட்டிக் கொலை

பிணமாக…

புதுச்சேரி:

புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியைச்  சேர்ந்தஜெகன், பாஜக இளைஞரணி வில்லியனூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.  இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் விளங்கினார். இவர் மீது கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜகன்

இந்த நிலையில் நேற்று இரவு குருமாம்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த ஜெகனை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் பலியானார்.  மேட்டுபாளையம்  காவல்நிலையத்தினர், ஜெகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக  காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ரவுடிகளுக்குள் நடந்த மோதல் என்றும், முன் பகை காரணமாக எதிர் கோஷ்டியினர் ஜெகனை கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்தது.