மாஸ்கோ

ஷ்ய அதிபர் புதின் தமது பதவிக்காலத்தை 2036 வரை நீட்டிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளார்.

சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் (67) தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் . கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளாடிமிர் புதினை முதல் முறையாக நியமனம் செய்தார்.

அப்போது ரஷ்யாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்.  ரஷ்ய அரசு அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி மூலம் குண்டுகள் வீசப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷிய மக்களிடையே புகழ்பெற்றார்

பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி விளாடிமிர் புதினை ரஷ்யாவின் பொறுப்பு அதிபராக நியமனம் செய்தார்.  அன்று முதல் ரஷ்யாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.

ரஷ்யாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.  ஆகவே  ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த  மசோதாவின் படி பழைய நடைமுறைகள் நீக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்கு வர உள்ளது.   ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதுப்பிக்கப்பட்டு  மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டது/.

அதாவது தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.  பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது.

இதனால் 2024 மற்றும் 2030 ஆகிய இரண்டு தேர்தல்களில் விளாடிமிர் போட்டியிட எந்தவித சட்டச்சிக்கலும் இல்லை.   அது மட்டுமிறி இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.