ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கையில் கையொப்பமிட்ட விளாடிமிர் புதின்

மாஸ்கோ

ணு ஆயுத தாக்குதலுக்கு எதிர் தாக்குதலுக்கு மட்டும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்ய ராணுவக்  கொள்கையில் அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்து இட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் வருடம் இயற்றப்பட்ட அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அப்போதைய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.  கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகலிஉமே விலகின.  அப்போது இரு நாடுகளிலும் சுமார் 1500 அணு ஆயுதங்களும், 700 அணு குண்டுகளும் உள்ளதாக கூறப்பட்டன.

வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ள புதிய ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க ரஷ்யா ஆதரவு அளித்தது.  ஆனால் அமெரிக்க அரசு இந்த கட்டுப்பாட்டுக்குள் சீனாவும் வந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் இடப்படும் என அறிவித்தது.   இதற்குச் சீனா மறுத்ததால்   இந்த யோசனை நடக்காது என ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில் ரஷ்யா தனது அணு ஆயுத தடுப்புக் கொள்கையை அமைத்துள்ளது.   அதில் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்து இட்டுள்ளார்.  அந்த புதிய கொள்கையின் படி எந்த நாடும் அணு ஆயுத தாக்குதல் நடக்கும் போது எதிர்த் தாக்குதலுக்கு மட்டும் ரஷ்யா தனது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை என கூறப்படுகிறது.  அமெரிக்கா தன்னிடம் அணு ஆயுதம் உள்ளதால் எந்த ஒரு நாட்டையும் மிரட்டிப் பணிய வைக்க நினைப்பதைத் தடுக்கவே ரஷ்யா இந்த கொள்கையை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.   பொதுவாகவே அமெரிக்காவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.