ஆசிய விளையாட்டுப் போட்டி : பி வி சிந்து மற்றும் சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஜாகர்த்தா

சிய விளையாட்டுப் போட்டி 2018ல் பிவி சிந்து மற்றும் சாய்னா நெய்வால் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி  ஜாகர்த்தா நகரிலும் பாலெம்பாங் நகரிலும் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டிகளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்தியாவின் சாய்னா நெய்வால் ஏற்கனவே அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  தற்போது மற்றொரு கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பி வி சிந்துவும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சிந்து தன்னை எதிர்த்து விளையாடிய தாய்லாந்து நாட்டு வீராங்கனையை 21-11, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி