உலக பேட்மிண்டன்: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார் பிவி சிந்து!!

உலக பேட்மிண்டன் இறுதி சுற்றில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்-ஐ வீழ்த்தி முதல் முறையாக வெற்றிப்பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 7 முறை தாய் ஜூவை எதிர்கொண்ட சிந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

sindhu

சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் வீரர் – வீரங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. வரும் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். லீக், காலிறுதி மற்றும் அரையிறுதிகு தகுதி பெற்ற வீரர்,வீராங்கனைகள் இறுதி போட்டியில் பங்கேற்பர்

அதன்படி பெண்கள் ஒற்றையர் பிடிவில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் பிவி சிந்து நேற்று லீக் சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பான் நாட்டின் அகானே யமாகுச்சியை எதிர்த்து விளையாடினர். தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் சிந்து 52 நிமிடங்கள் யமாகுச்சியை எதிர்கொண்டார். இறுதியாக 24-22, 21-15 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சிந்து வெற்றிப்பெற்றார்.

இதையடுத்து இன்று லீக் ஆட்டத்தின் 2வது சுற்று நடைபெற்றது. இதில் சிந்து நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் உடன் மோதினார். இருவருக்குமிடையே சுமார் 1 மணி 1 நிமிடம் வரை ஆட்டம் நீடித்தது. முதல் சுற்றில் 21-14 என்ற செட் கணக்கில் தாய் ஜூ சிந்துவை வீழ்த்தினார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட சிந்து 21-16 என்ற செட்களில் தாய் ஜூவை வீழ்த்தினார். அடுத்ததாக வெற்றியை தீர்மானிக்கும் 3வது சுற்றில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக செயல்பட்ட சிந்து 21-18 என்ற செட்கணக்கில் தாய் ஜூவை வீழ்த்தினார்.

இதையடுத்து, இந்த போட்டியில் சிந்து 14-21, 21-16, 21 – 18 என்ற செட்களில் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டிகள் உட்பட 7 போட்டிகளில் தாய் ஜூ உடன் மோதி தோல்வியடைந்த சிந்து முதல் முறையாக தனது வெற்றியை பதிவிட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் போட்டியின் லீக் சுற்றில் சிந்து தனது 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.