உலக பாட்மிண்டன்  : அரையிறுதிப் போட்டியில் சிந்து…

கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்தில் நடக்கும் உலக பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி சிந்து வெண்கலப் பதக்கை வென்றுள்ளார்.

அகில உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.    இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.    அதில் இந்தியாவின் வீராங்கனை சிந்துவும், சீனாவின் சன் யூ வும் மோதினார்கள்.   போட்டி 39 நிமிடம் நிகழ்ந்தது.  இந்த போட்டியில் சிந்து 21-14, 21-9 என்னும் செட் கணக்கில் சன் யு வை சிந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.   இதன் மூலம் மூன்றாம் முறையாக சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அதே நேரத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் தென் கொரிய வீரரிடம் தோற்றுள்ளார்.