உலக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன்: நழுவ விட்ட சாய்னா; பி.வி.சிந்து தகுதி

pvsindhu-1பேட்மிட்டன் போட்டி என்றால் நோவால் என்ற பெயர் வாயில் நுழைகிறதோ இல்லியோ சாய்னா என சொல்லாதவர்கள் இருக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம், உலக பேட்மிட்டன் தரவரிசையில் முதல் இடம் என இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். ஆனால் சமீப காலமாக அவரின் விளையாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. அவருக்கு பின் வந்த பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம், சீன ஓபன் டென்னிஸ் சாம்பியன் என வேகமாக வளந்துள்ளார். சாய்னாவின் பெயர் மங்குவதற்கு சிந்துவின் எண்ட்ரியும் ஒரு காரணம்.

இந்நிலையில், துபாயில் டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ள ‘உலக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன்’ தொடரில் பங்குபெற பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். ஆனால் சாய்னா நோவல் இந்த தொடரில் விளையாட தகுதி பெறவில்லை. தற்பொழுது தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து முதல் இடத்திற்கு முன்னேற இது ஒரு அறிய வாய்ப்பு. பயன்படுத்திக்கொள்வாரா எனப்பார்க்கலாம்.