இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி!

இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா மற்றும் கிதாம்பி ஸ்ரீகாந்த வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

pv

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியாவை எதிர்கொண்டார். இதில் கிரேகோரியாவை 23-21, 21-7 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சிந்து வெற்றிப்பெற்றார்.

saina

மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் இந்தோனேசியாவின் பிட்டிரியானியை 21-17, 21-15என வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து பிவி சிந்து, சாய்னா உள்ளிட்டோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

sri

இதேபோன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானை சேர்ந்த கெண்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிப்பெற்று ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார். இதையடுத்து ஸ்ரீகாந்த கிதாம்பியும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.