ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றிற்கு பி.வி.சிந்து, சமீர் வர்மா முன்னேற்றம்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பிவிசிந்து மற்றும் சமீர் வர்மா ஆகியோர் முன்னேறினர்.

sindhu

சீனாவின் தலைநகர் ஹாங்காங்கின் காவ்லூனில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்தின் நிட்சாவுனை எதிர் கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து, முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 13-21 என இழந்த சிந்து, அடுத்த செட்டில் சுதாரித்து 21-17 என வென்றார்.

முடிவில், இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் நிட்சாவுனை 21-15, 13-21, 21-17 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா, தாய்லாந்தின் சுப்பாயானுவை 21-17 21-14 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.