சீன ஓபன் பாட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பி.வி.சிந்து

bwf-thaihot-china-open-2016-day-4_23491714-aedb-11e6-b4b4-3ed39deda4e7சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் சீனாவின் புஷாவ் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுன் யூ என்ற சீன வீராங்கனையுடன் இந்தியாவின் பி.வி.சிந்து விளையாடினார். விருவிருப்புடன் ஆரம்பித்த ஆட்டத்தில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து முதல் செட்-யை 21-11 என்ற புள்ளி கணக்கில் கைபற்றினார். இரண்டாவது செட்-யை சீன வீராங்கனை 17-21 என்ற புள்ளிகணக்கில் கைபற்ற இறுதி செட்-ல் போட்டியை வெல்லபோவது யார் என்கிற எதிர்பார்ப்புடன் இந்தியாவின் பி.வி.சிந்து 21-11 என்ற புள்ளிகணக்கில் கைபற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட சிந்து, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.