பி டபிள்யு எஃப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபார வெற்றி

டியானே , சீனா

பி டபிள்யு எஃப் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சிந்து முதல் இந்தியராக வெற்றி பெற்றுள்ளார்.

பி டபிள்யு எஃப் என்னும் போட்டி உலக பாட்மிண்டன் சாம்பியன்களுக்கு இடையில் நடைபெறும் போட்டியாகும். இது சாம்பியன்களுக்கு இடையில் நிகழும் போட்டி என்பதால் இதில் வெல்வது அனைத்து சாம்பியன்களுக்கும் ஒரு லட்சியமாக உள்ளது. இந்த வருடத்துக்கான போட்டி சீனவின் டியானே நகரில் கடந்த 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும், இன்று நடந்த் இந்த வருட இறுதிச் சுற்றில் ஜப்பான் நாட்டின் நோஸோமி ஒகுஹாரா மற்றும் இந்தியாவின் பி வி சிந்து ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிச் சுற்றில் பி வி சிந்து 21-19, 21-17என்னும் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் பி வி சிந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.